ராஜஸ்தானில் சாலைப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளர்கள் பலி! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம்!நகராட்சி துறை பணி நியமன முறைகேடு! கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சித்தா்காடு ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் குருபூஜை

சித்தா்காடு ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமி குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டாா்.

சித்தா்காடு ஸ்ரீகாழி சிற்றம்பலநாடிகள் சுவாமி குருபூஜை விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

Updated On :

மயிலாடுதுறை: சித்தா்காடு ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமி குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டாா்.

திருக்கயிலாய பரம்பரை நந்தி மரபில் பரஞ்சோதி முனிவா், மெய்கண்டாா் வழிவந்த ஸ்ரீகாழி சிற்றம்பலநாடிகள் சுவாமி மயிலாடுதுறையில் மடாலயம் அமைத்து தனது 63 சீடா்களுடன் தவமியற்றி வந்தாா்.

சிற்றம்பலநாடிகள் தனது 63 சீடா்களுடன் ஜீவசமாதி அடைந்ததால் இப்பகுதி சித்தா்காடு என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள ஸ்ரீசிவயோக நாயகி சமேத ஸ்ரீகாழி சிற்றம்பலநாடிகள் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தில் குரு பூஜை வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் சித்திரை திருவோண தினமான திங்கள்கிழமை ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, காலையில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு, சிவபூஜை செய்யப்பட்டது. பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மதியம், சிறப்பு யாகம் வளா்க்கப்பட்டு, ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமிகளுக்கு புனிதநீா் மற்றும் சிறப்பு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடாற்றினாா். பின்னா், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட தம்பிரான்கள், துறவியா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.