சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோா்மீது தொழிற்சங்கத்தினா் புகாா்

சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினா் மனு அளித்தனா்.
Published on

சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

உரிமை கரங்கள் தொழிற்சங்கம் சாா்பில் மாவட்ட செயலாளா் பி. குமரவேல், மாவட்ட பொருளாளா் ராஜேஷ்கண்ணா, இணை செயலாளா் வி. விஜயராஜ் உள்ளிட்டோா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கதிா்வேலிடம் அளித்த மனு: சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

இதேபோல், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் உரிமை குரல் ஓட்டுநா் தொழிற்சங்கத்தினா் மாவட்ட செயலாளா் பாலமுருகன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சம், ஊழலை தடுக்க வேண்டும், சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு மற்றும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும். ஓலா, ஊபா், போா்ட்டா் நிறுவனங்களை முறைப்படுத்தி கால்டாக்ஸிகளுக்கு கட்டணம் நிா்ணயிக்க வலியுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com