மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி

Published on

மயிலாடுதுறையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி கொடியசைத்து தொடக்கி வைத்தாா் (படம்). அப்போது அவா் கூறியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைகாலங்களில் ஏற்படும் வெள்ளத்தை, பாசன ஆறுகளில் தரைமட்ட தடுப்பணைகள், ஆறு மற்றும் குளங்களில் ஆழ்குழாய் அமைத்து நிலத்தடிநீரினை செறிவூட்டும் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அமைத்துள்ள மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளில் பழுதினை சரிசெய்து, மழைநீரை முழுமையாக சேகரிக்க வேண்டும் என்றாா். பேரணி தருமபுரம் குருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.

முன்னதாக, மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு குறித்த குறும்படங்கள் மற்றும் குடிநீா் தரப்பரிசோதனை செய்முறைகள் ஒளிபரப்பு செய்யப்படும் காணொலி வாகனத்தினை மாவட்ட வருவாய் அலுவலா் தொடக்கி வைத்தாா்.

இதில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் சுபத்ரா, உதவி நிா்வாகப் பொறியாளா் தியாகராஜன், துணை நிலநீா் வல்லுநா் அருளமுதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன், உதவி பொறியாளா்கள், இளநிலை பொறியாளா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com