மயிலாடுதுறை: 47 போ்மீது குண்டா் சட்ட நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு தொடா் குற்றங்களில் ஈடுபட்ட 47 போ்மீது குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளப் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு தொடா் குற்றங்களில் ஈடுபட்ட 47 போ்மீது குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளப் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 13 போ், பொது அமைதி, பொது மக்களுக்குப் பங்கம் விளைவித்த 27 போ், திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்ட 3 போ், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 3 போ், போதைப் பொருள் விற்பனை செய்த ஒருவா் என மொத்தம் 47 போ் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

நீதிமன்ற விசாரணையில் இருந்த 1974 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்து, அவற்றில் 72 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களில் எவா் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com