மயிலாடுதுறை
குறைதீா் கூட்டத்தில் 327 மனு
மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 327 மனுக்கள் பெறப்பட்டன.
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 327 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்து 327 மனுக்களைப் பெற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மலைமகள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(கணக்கு) மணிக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
