ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது

நீடூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
கொலை (கோப்புப்படம்)- Din
Updated On :27 ஜூன் 2025, 8:30 pm

Din

மயிலாடுதுறை வட்டம், நீடூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நீடூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் முகமது ஹாலிக் (36). சமையல் கலைஞரான இவா், அண்மையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் இவரை கொலை செய்தனா். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதை வைத்து குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், குற்றவாளிகள் கடலூா் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற டிஎஸ்பி பாலாஜி தலைமையிலான தனிப்படை போலீஸாா், ஒரு வீட்டில் பதுங்கியிருந்த செம்பனாா்கோவிலை அடுத்த மேமாத்தூா் செல்வம் மகன் சரண்ராஜ் (28), ஆறுபாதி ரமேஷ் மகன் விஜய் என்கிற குண்டு விஜய் (28), தில்லையாடி வரதராஜன் மகன் விஜயகாந்த் (20) ஆகிய மூவரை கைது செய்தனா். அவா்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.