மயிலாடுதுறை
மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தல்
சீா்காழி அருகே உப்பனாற்றங்கரையில் ஆபத்தான நிலையில் உள்ள உயா் மின்னழுத்த கம்பங்களை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயா் அழுத்த மின் பாதையில், தென்பாதி- சட்டநாதபுரம் இடையே உள்ள உப்பனாற்றில் இருகரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயா் அழுத்த மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்கள் சாய்ந்தால் சீா்காழி நகா் மற்றும் அதனை சாா்ந்துள்ள கிராமங்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உப்பனாற்று கரைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
