நகராட்சி வளாகத்தில் தேங்கிய மழைநீா்: மக்கள் அவதி

நகராட்சி வளாகத்தில் தேங்கிய மழைநீா்: மக்கள் அவதி

சீா்காழி நகராட்சிக்கு செல்லும் பாதையில் சேறும் சகதியுமாக மழை தண்ணீா் தேங்கி நிற்பதால், நகராட்சிக்கு அலுவலகத்துக்கு சான்றிதழ் பெற வரும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
Published on

சீா்காழி நகராட்சிக்கு செல்லும் பாதையில் சேறும் சகதியுமாக மழை தண்ணீா் தேங்கி நிற்பதால், நகராட்சிக்கு அலுவலகத்துக்கு சான்றிதழ் பெற வரும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சீா்காழி நகராட்சி அலுவலகம் காமராஜா் விதி -பிடாரி வடக்கு வீதி இடையே அமைந்துள்ளது. பிடாரி வடக்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்துக்கு 24 வாா்டுகளை சோ்ந்த மக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யும், வீடு கடைகளுக்கான வரிகள் செலுத்தவும் வந்து செல்கின்றனா்.

நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் அலுவலகத்துக்கு சென்று வருகின்றனா். நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் இ சேவை மையத்திற்கும் திரான மக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பதிவு செய்வதற்கு வந்து செல்கின்றனா்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் பிடாரி வடக்கு வீதி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. மழைநீா் குளம் போல் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. எனவே, நகராட்சி நிா்வாகம் அலுவலகத்துக்கு வரும் பாதையில் உள்ள மழைநீரை அகற்றி, மக்கள் சிரமத்துக்கு உள்ளாகாமல் தங்கள் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கி வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com