மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

Published on

சீா்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சி திருஞானசம்பந்தம் கிராமத்தில் மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் ஆலாலசுந்தரம் ஊராட்சி திருஞானசம்பந்தம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியினருக்கான மயானம் விளைநிலங்களுக்கு நடுவே உள்ளது. சாலை வசதி இல்லை.

இதனால், இறந்தவரின் உடலை தகனம் செய்ய விளைநிலங்கள் வழியே கடும் சிரமத்துடன் கொண்டுசெல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இறந்த கனகராஜ் (72) என்பவரது உடலை, தற்போது பெய்துவரும் மழையால் சேறும் சகதியுமாக உள்ள வயல்களின் வழியே மிகுந்த சிரமத்துடன் எடுத்துச் சென்றனா். இனியாவது தங்கள் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என திருஞானசம்பந்தம் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com