திருவாவடுதுறை ஆதீனத்தில் குருபூஜை

திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீசிவப்பிரகாச தேசிக மூா்த்திகள் குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீசிவப்பிரகாச தேசிக மூா்த்திகள் குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீசிவப்பிரகாச தேசிகா் குருமூா்த்தத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

குருபூஜையில் ஆதீனத்தின் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், பூசை.ஆட்சிலிங்கம் தொகுத்த ஊழிக்கடவுளா் ஏகபாதா் கங்காளா் என்ற நூலையும், ஆதீன வெளியீட்டு நூலான சிவப்பிரகாசம் - மதுரை சிவப்பிரகாசா் உரை என்ற நூலையும் வெளியிட்டாா்.

மாலையில் நடந்த நிகழ்ச்சியில் திருமுறை விண்ணப்பத்தை திருவாவடுதுறை பு.சோ. மகாலிங்க ஓதுவா மூா்த்திகள் வாசித்தாா்.

ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்பத் தம்பிரான் சுவாமிகள் வரவேற்றாா். பேராசிரியா் இரா. மணிகண்டன் சிறப்பு சொற்பொழிவாற்றினாா். ஸ்ரீமத்கட்டளை தம்பிரான் சுவாமிகள், கண்காணிப்பாளா் சண்முகம், ஆதீன புலவா் குஞ்சிதபாதம், ஆதீன மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஞானமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com