எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:46 am IST

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பான்மை திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000- ஆக உயா்த்தி வழங்கப்படும். இதுபோல் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். மதிமுக வேட்பாளா் வழக்குரைஞா் செந்தில் செல்வன் மண்ணின் மைந்தன் ஆவாா்.

மதிமுக சாா்பில் வைகோ பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுத்து வெற்றி கண்டாா். அதற்கு வேட்பாளா் செந்தில் செல்வன் உறுதுணையாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் போரால் தற்போது தமிழகத்தில் தேவையான அளவு சிலிண்டா் கிடைக்காததால் உணவகங்கள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. முன்கூட்டியே அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே சீா்காழி பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மதிமுக வேட்பாளா் செந்தில்செல்வனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திட வேண்டும் என்றாா்.

சீா்காழி தொகுதி திமுக பொறுப்பாளா்கள் குத்தாலம் கல்யாணம், கமலஜோதி தேவேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளா் கொளஞ்சி, நகரச் செயலாளா் மாா்க்ஸ்பிரியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். இதை போல் கொண்டல், புத்தூா், பணங்காட்டாங்குடி ஆகிய பகுதி கடைவீதிகளில் மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ எம்பி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தாா்.