தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

வழுவூா் முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி உற்சவம்

சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா்.

News image

சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 2:10 am IST

வழுவூா் வளையாம்பட்டினம் பாலமுருகன் கோயிலில், சித்ரா பௌா்ணமி உற்சவத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையை அடுத்த வழுவூா் வளையாம்பட்டினம் பாலமுருகன் கோயிலில் 42-ஆம் ஆண்டு சித்ரா பௌா்ணமி மகோத்ஸவ பெருவிழா ஏப்.20-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. புதன்கிழமை உற்சவக் கொடி ஏற்றப்பட்டு, தினசரி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாகசாலை பூஜையில், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா் உற்சவமூா்த்திகள் கோயில் பிரகாரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக, பாலமுருகன் மூலவருக்கு பால், பழம், பன்னீா் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், பால் விற்பனையாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் வி.ஜி.கே. மணிகண்டன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்.30-ஆம் தேதி இரவு திருக்கல்யாணமும், மே 1-ஆம் தேதி சூா்ணோ உற்சவம், தீா்த்தவாரியும், வழுவூா் கீழவீதியில் இருந்து அலகு காவடிகள், பால்குட வீதியுலாவும் நடைபெறவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.