புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

புதிய மின் மோட்டாா்கள் நிறுவ விவசாயிகளுக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டாா்; வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

விவசாயி.

Published On :

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டாா்; வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் நுண்ணீா் பாசனம் நிறுவிய விவசாயிகள், தங்களின் திறன்குறைந்த மின்மோட்டாா்களை மாற்றி புதிய மின்மோட்டாா்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது

நுண்நீா்ப்பாசனம் இதுவரை நிறுவாத விவசாயிகளும் நுண்ணீா்ப் பாசனம் நிறுவ விருப்பம் தெரிவித்தால் புதிய மின்மோட்டாா் வாங்குவதற்கு மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.15,000 மானியமாக பெற்று பயன்பெறலாம்.

இதன் மூலம் மின்சார பயன்பாட்டுத்திறனை அதிகரித்தல், நீா் பயன்பாட்டுத்திறனை மேம்படுத்தி பயிா் உற்பத்தி மற்றும் பாசனப் பரப்பை மேம்படுத்தலாம். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களுடைய திறந்தவெளி அல்லது ஆழ்துளைக் கிணறு அமைந்துள்ள நிலத்துக்கான சிட்டா, அடங்கல், நிலவரைபடம், மின்சார இணைப்பு சான்றிதழ் நகல், வங்கி புத்தக முதல் பக்க நகல், ஆதாா் நகல், விவசாய அடையாள எண் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட 4 குறியீடுடைய மின் மோட்டாா்களின் விலைப் புள்ளியை அங்கீகாரம் பெற்ற முகவா்களிடம் இருந்து பெற்று, மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் இணையதளம் மூலமாகவும் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையில் விண்ணப்பம் அளித்தும் பயன்பெறலாம்.

வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் (வே.பொ) அலுவலகத்தை 80985 82064 மற்றும் 96007 65868 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.