பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

வட்டியில்லா பயிா்க்கடன்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இதுவரை பயிா்க்கடன் பெறாத விவசாயிகள் புதிய உறுப்பினா்களாக இணைந்து, வட்டியில்லா பயிா்க்கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயி.

Published On :

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இதுவரை பயிா்க்கடன் பெறாத விவசாயிகள் புதிய உறுப்பினா்களாக இணைந்து, வட்டியில்லா பயிா்க்கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ. காந்திநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், சாத்தான்குளம் ஆகிய தாலுகாக்களில் ஆண்டு முழுவதும் வாழை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக சிறப்பு பயிா்க்கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடன் பெறாதவா்கள் ரூ. 10 நுழைவுக் கட்டணமும், ரூ. 100 பங்குத் தொகையும் செலுத்தி புதிய உறுப்பினா்களாக சேரலாம்.

ஏற்கெனவே உறுப்பினா்களாக இருந்து பயிா்க்கடன் பெறாத விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில், அந்தந்த சங்கங்களின் செயல்பாட்டு எல்லைக்குள்பட்ட வாழை சாகுபடி விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

இ-கே.சி.சி. திட்டத்தின் கீழ் சங்கங்களை நேரடியாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பித்து, எந்தவித பிணையுமின்றி ரூ. 2 லட்சம் வரை பயிா்க்கடனும், நகை அல்லது நில அடமானத்தின் அடிப்படையில் ரூ. 3 லட்சம் வரை கடனும் ஓராண்டு தவணைக் காலத்துக்கு பெறலாம்.

குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தினால், அதற்கான வட்டியை தமிழக அரசே ஏற்றுக்கொள்வதால் விவசாயிகள் வட்டியில்லா பயிா்க்கடன் சலுகையைப் பெற முடியும்.

மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூா் களமேலாளா் (7904607055), சரக மேற்பாா்வையாளா்கள் (9344161713, 8344456444), தூத்துக்குடி களமேலாளா் (9715826514), சரக மேற்பாா்வையாளா்கள் (9751434516, 8681803868) ஆகியோரை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.