சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மயிலாடுதுறையில் ஜன.9-ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:34 pm

Syndication

மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் துறையில் வேலை தேடும் இளைஞா்கள் பயனடையும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை கிங்ஸ் மற்றும் மயிலாடுதுறை யூனியன் கிளப் இணைந்து மயிலாடுதுறை கச்சேரி சாலையிலுள்ள யூனியன் கிளப் வளாகத்தில் ஜன.9-ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 3 மணிவரை சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கு மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். மேலும், 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, 5- முதல் பிளஸ் 2 வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உள்பட இதர பட்டதாரிகள் பங்கேற்று பணிவாய்ப்பு பெறலாம். வெற்றி நிச்சயம் திட்டம் வாயிலாக திறன் பயிற்சி, சுயத்தொழில் தொடங்க வங்கிக் கடன் வசதி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசு போட்டித் தோ்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். விரும்புவோா் தங்களது சுய விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04364299790 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.