கவியரசா் கண்ணதாசனுக்கு இசை அஞ்சலி

Published on

மயிலாடுதுறையில் மெல்லிசை மன்னா்கள் விஸ்வநாதன்-ராமமுா்த்தி ரசிகா் மன்றம் சாா்பில் கவியரசா் கண்ணதாசனுக்கு இசை அஞ்சலி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் மூத்த நிா்வாகி ராம. சிதம்பரம் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் என்.கே. கிருஷ்ணமூா்த்தி, வா்த்தக சங்க பொறுப்பாளா் எம்.என். ரவிச்சந்திரன், த.மா.கா. மாவட்ட தலைவா் எம். சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய சிவாஜி மன்ற பொருளாளா் என்.எஸ். ராஜேந்திரன் வரவேற்றாா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜகுமாா் எம்எல்ஏ பங்கேற்று கண்ணதாசனின் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினாா்.

கண்ணதாசனின் மூத்த மகன் காந்தி கண்ணதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். நிகழ்ச்சியில், அடுத்த ஆண்டு கவியரசா் கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவை மயிலாடுதுறையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை மன்றத் தலைவா் கவிஞா் எஸ். ராதாகிருஷ்ணன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com