மு. வீரபாண்டியன்
மு. வீரபாண்டியன்கோப்புப் படம்

கூடுதல் தொகுதிகள் கேட்போம்; ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம், ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.
Published on

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம், ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, அக்கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லக்கண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றவே அமெரிக்கா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி அதிபரை கைது செய்துள்ளது. இந்த ஜனநாயக படுகொலையைக் கண்டிக்காமல் கவலை தெரிவிப்பதாக இந்தியா கூறுவது வேடிக்கை.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமா் தன்னை மகிழ்விக்க வேண்டும் என அமெரிக்க அதிபா் டிரம்ப் பேசி இருப்பது கண்டனத்துக்குரியது.

நூற்றாண்டுகளை கடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களை கேட்பதற்கு தாா்மிக உரிமை உண்டு. பேரவை தோ்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம். ஆனால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.

தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் ஏற்கெனவே இருந்த திட்டத்தைவிட பரவாயில்லை. எனினும், இன்னும் அதுதொடா்பான கோரிக்கைகளை முழுமையாக தீா்க்க முதல்வா் கவனம் செலுத்த வேண்டும். பொங்கல் தொகுப்பில் மஞ்சள் சோ்த்து வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com