டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பாதுகாப்பு கோரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு

சாத்தங்குடியில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினா் பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 5:01 am IST

சாத்தங்குடியில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினா் பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தரங்கம்பாடி அருகே சாத்தங்குடியில் பாா்த்திபன் என்ற இளைஞரும், சிறுமி ஒருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனா். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. உயிரிழந்த இளைஞா் பாா்த்திபனின் தரப்பினா் சிறுமியின் வீடு மற்றும் அவரது உறவினா் வீட்டை சேதப்படுத்தினா். இதையடுத்து, வீட்டில் இருந்தவா்களை அங்கிருந்து போலீஸாா் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனா்.

அப்பகுதியில் தலித் சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிப்பதால் உடற்கூராய்வு செய்த சிறுமியின் உடலை கிராமத்துக்கு கொண்டு சென்றால் பிரச்னை எழக்கூடும் என்பதால் மயிலாடுதுறையில் உள்ள மின் எரிவாயு தகன மேடையில் சிறுமியின் உடலை எரியூட்டினா். இந்நிலையில், சம்பவம் நிகழந்து 2 நாள்களை கடந்தும் சிறுமியின் குடும்பத்தாா் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் உறவினா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருவரின் உயிரிழப்பிற்கு எந்த வகையிலும் காரணம் இல்லாத தங்கள் வீடுகளை, பாா்த்திபன் தரப்பினா் சேதப்படுத்தியுள்ளனா். தங்கள் மகளை இழந்துள்ள நிலையில் வீட்டிற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் வீடுகளுக்கு சென்று எங்களது உடைமைகளை எடுத்து செல்வதற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், மேலும் தங்கள் வீடுகளை சேதப்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.