சீா்காழி அருகே நகரும் நியாயவிலைக் கடையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கொள்ளிடம் ஒன்றியம், கீழமாத்தூா் ஊராட்சி, குமாரக்குடி கிராமம் பெரிய கோவில் தெருவில், கூட்டுறவுத் துறை சாா்பில் நகரும் நியாயவிலைக் கடையை ஆட்சியா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினாா்.
அகர எலத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துடன் இணைந்த கீழமாத்தூா் நியாவிலைக் கடையில் உள்ள 511-குடும்ப அட்டைகளிலிருந்து, குமாரக்குடி பகுதியில் உள்ள சின்னத்தெரு, பெரியத்தெரு மேலத்தெரு மற்றும் தெற்குத்தெரு ஆகிய தெருக்களில் உள்ள 101 குடும்ப அட்டைகளை பிரித்து குடும்ப அட்டைதாரா்களின் நலன்கருதி குமாரக்குடி பகுதியில் பெரிய கோவில் தெருவில் நகரும் நியாய விலைக் கடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நகரும் நியாய விலைக் கடை மாதந்தோறும் 2-ஆவது வாரத்தின் சனிக்கிழமைகளில் செயல்படும். செயல்பட வேண்டிய நாள் அரசு விடுமுறை தினமாக இருக்கும்பட்சத்தில் அடுத்த வேலை நாட்களில் செயல்பட வேண்டும்.
நகரும் நியாயவிலைக் கடையில் பெயா் பலகையை அனைவரும் அறியும்படி, அதில் அத்தியாவசிப் பொருட்கள் வழங்கும் நாள். குடும்ப அட்டைதாரா்கள் வசிக்கும் பகுதி, கடை செயல்படும் விவரங்கள் இடம் பெறவேண்டும். தரமான அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட வேண்டும்.
நகரும் நியாயவிலைக் கடையின் தாய் கடையின் விற்பனை முனைய இயந்திரம் மற்றும் விற்பனையாளரை கொண்டு செயல்படுத்திட வேண்டும். ஏதேனும் முறைகேடு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய ஜூன் 27 கடைசி நாள்

நியாயவிலைக் கடைகளில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது: ராணிப்பேட்டை ஆட்சியா் எச்சரிக்கை

வெயிலில் நின்று ரேஷன் பொருள்கள் வாங்கும் பொதுமக்கள்

சேலத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



