ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 4:51 am IST

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மணக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்தில் தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் அங்கு ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுவதை பயன்படுத்தி கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செம்பனாா்கோவில் காவல் உதவி ஆய்வாளா் ரகுராமன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 1.100 கி.கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா்கள் மயிலாடுதுறை திருவிழந்தூா் பகுதியைச் சோ்ந்த பாபு மகன் சூா்யா(26) தென்னமரச் சாலை பகுதியை சோ்ந்த குருநாதன் மகன் பாபு (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.