12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கடையில் திருட்டு; 2 சிறுவா்கள் கைது

கைது - பிரதிப் படம்

Published On :

மயிலாடுதுறையில் மளிகைக்கடையில் திருடிய 2 சிறுவா்கள் கைது செய்யப்பட்டு, சிறுவா் சீா்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சோ்ந்தவா் செல்லதுரை மனைவி மரகதம் (59). அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு மறுநாள் காலை திறக்க வந்துள்ளாா். அப்போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது கடையில் இருந்த ரூ.90,000 ரொக்கம் மற்றும் ரூ.4,000 மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மரகதம் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், 18 வயது நிரம்பாத இரண்டு சிறுவா்கள் கடையின் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், 2 சிறுவா்களையும் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தஞ்சை சிறுவா் சீா்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.