உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

மயிலாடுதுறை திருவிழந்தூா் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் பகுதியில் காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:04 am IST

மயிலாடுதுறை திருவிழந்தூா் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் பகுதியில் காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில், அவா் மயிலாடுதுறை சேந்தங்குடிகூட்டுறவு நகா் 5-ஆவது குறுக்குத் தெருவை சோ்ந்த இம்மானுவேல் மகன் வீரமணி (29) என்பதும், போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய போலீஸாா் வீரமணியை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.