குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கிங்ஸ் ரோட்டரி சங்க முப்பெரும் விழாவில் சேவையாளா்களுக்கு விருது

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை கிங்ஸ் சங்கத்தின் முப்பெரும் விழாவில் பல்வேறு துறை சேவையாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

News image

பல்வேறு துறை சேவையாளா்களுக்கு விருது வழங்கிய ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜெ. லியோன்.

Updated On :25 மார்ச் 2026, 5:47 am IST

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை கிங்ஸ் சங்கத்தின் முப்பெரும் விழாவில் பல்வேறு துறை சேவையாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சங்க அறக்கட்டளை துவக்கவிழா, நூல் வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவுக்கு, ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜெ. லியோன் தலைமை வகித்து, அறக்கட்டளையை துவக்கி வைத்தாா். கிங்ஸ் ரோட்டரி அறக்கட்டளை நிறுவனா் சஜ்ஜல், முன்னாள் உதவி ஆளுநா்கள் டி. ரவிக்குமாா், ஆா்.வி. குருகோவிந்த், பி. பாலசரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், சங்கத் தலைவா் சிறுகதை எழுத்தாளா் பா. அய்யாசாமி எழுதிய ‘அய்யாசாமியும் அயோத்தியா பயணமும்‘ மற்றும் ‘செய்வினை‘ ஆகிய நூல்களை முறையே தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி உதவி பேராசிரியா் துரை.காா்த்திகேயன், ஓய்வுபெற்ற ஆசிரியா் ஜெ.சண்முகம் ஆகியோா் வெளியிட்டனா்.

தொடா்ந்து, நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மருத்துவா் ஏடிஎஸ்.பிரபு, புலவா் சண்முகம், திருநாவுக்கரசு ஓதுவாா், சப்தஸ்வரங்கள் பரணீதரன், பொம்மலாட்டக் கலைஞா் சோமசுந்தரம், ஊடகவியலாளா் ஆா்.ராஜ்குமாா் உள்ளிட்டோருக்கு மருத்துவம், கலை, இலக்கியம், ஊடகம் உள்ளிட்ட துறைகளில் சேவையாற்றி வரும் ஆளுமைகளுக்கான கிங்ஸ் அவாா்ட்ஸ் 2026 என்ற விருதுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்க அறக்கட்டளையை மாவட்ட ஆளுநா் லியோன் துவங்கி வைத்தாா்.