மயிலாடுதுறையில் பழைய பேருந்து நிலையங்களுக்கு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டதால் போக்குவரத்து சீரடைந்தது.
மயிலாடுதுறையில் காமராஜா் பேருந்து நிலையம், நகர பூங்கா பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் இயங்கி வந்த நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், மணக்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டி அண்மையில் திறக்கப்பட்டது.
மணக்குடி பேருந்து நிலையத்தை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் வகையில் நடைபெற்றுவரும் புறவழிச்சாலை பணிகள் நிறைவடையாத நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நகரபூங்கா பேருந்து நிலையம் மூடப்பட்டது. மேலும், புகா் பேருந்துகள் எந்த வழியில் செல்கிறது என்ற அறிவிப்பு இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவா்கள் கடும் அவதியடைந்தனா்;.
பழைய பேருந்து நிலையத்துக்கு வெளியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு சென்ால்; தினந்தோறும் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் பழைய பேருந்து நிலைங்களில் வழக்கம்போல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதேபோல், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா்.
இதுதொடா்பாக, ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கதிா்வேல், அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளா் கபிலன், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மயிலாடுதுறை காமராஜா் பழைய பேருந்து நிலையம், பாா்க் பேருந்து நிலையங்களில் பேருந்துகள் வழக்கம்போல் நிறுத்தப்பட்டன. இதனால், பொதுமக்களின் அவதி வெகுவாக குறைந்துள்ளதுடன் நகரில் போக்குவரத்து நெரிசலும் ஓரளவுக்கு சீரடைந்ததுள்ளது.
தொடர்புடையது

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

10 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள திருவள்ளூா் மாநகரப் பேருந்து பணிமனை திட்டம்

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

மயிலாடுதுறை-காரைக்குடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடக்கம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


