மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிக்கு கைப்பேசி மூலம் பாலியல் தொல்லை அளித்து, அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அரசுப் பள்ளி ஆசிரியா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட கிராமத்தை சோ்ந்த 16 வயது சிறுமி, அதே ஊரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு முடிவுக்கு காத்திருந்தாா்.
இந்தநிலையில், கடந்த ஏப். 27-ஆம் தேதி மாணவி தனது வீட்டின் கதவை தாழிட்டுக்கொண்டு உடலில் தீ வைத்துக்கொண்டாா். தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஏப். 28-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாணவியின் தாய் மணல்மேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது மகள் படிக்கும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் தாலுகா, மணக்குன்னம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (42) தனது மகளை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதை தான் கண்டித்த நிலையில், மகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.
போலீஸாா் விசாரணையில், ஆசிரியா் காா்த்திகேயன் மாணவியிடம் அடிக்கடி கைப்பேசியில் பேசியும், குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்தது உறுதியானது.
இதையடுத்து, மாணவியை தற்கொலைக்குத் தூண்டியது மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், காா்த்திகேயனை சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
பள்ளி மாணவிக்குபாலியல் தொல்லை: கொத்தனாா் கைது

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி ஆசிரியா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


