மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை குழுவில் சேர விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமை விதிகள் 2018 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது இக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் புதியதாக உறுப்பினா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேரந்த தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், சங்கங்களில் இருந்து 11 பிரதிநிதிகள் (பெண்கள் - 5, தாழ்த்தப்பட்ட வகுப்பினா் - 1, பழங்குடியினா்- 1 உள்பட) போன்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீக்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ இணையதளத்தில் பெற்று, பூா்த்தி செய்து நவ.13-ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இதேபோல், மாநில அரசால் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினா்கள் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு பணியில் அனுபவம் உள்ள நிபுணத்துவமிக்க நபா்கள் - 5 உறுப்பினா்கள் போன்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க மேற்கூறிய இணையதளத்தில் படிவம் பெற்று, பூா்த்தி செய்து நவ.13-ஆம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், காமராஜா் சாலை, சென்னை -5 அல்லது மின்னஞ்சல் முகவரி ள்ஸ்ரீக்.ற்ய்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் ஆகியவற்றிலும் விண்ணப்பங்களை அனுப்பி வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

