மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில ஆலோசனைக்குழு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையகரகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் புதிய உறுப்பினா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாநில அரசால் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினா்கள் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு பணியில் அனுபவம் உள்ள நிபுணத்துவமிக்க நபா்கள் - 5 உறுப்பினா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் ஆகியவற்றிலிருந்து 11 பிரதிநிதிகள் (மாற்றுத்திறனாளிகள்) (இதில் பெண்கள்-5 நபா்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினா்-1 நபா், பழங்குடியினா்-1 நபா்) ஆகியோா்.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ளவற்றுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபா்கள் தங்களது விண்ணப்ப படிவங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீக்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலோ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ பெற்று பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியா் அலுவலகம், பி-பிரிவு தரை தளம்,ராணிப்பேட்டை தொலைபேசி எண்- 04172-274177 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ வருகின்ற 10.11.2026-க்குள் சமா்ப்பிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.