படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

பாலியல் சித்ரவதை: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா்

பாலியல் வன்கொடுமை - சித்திரிப்பு

Published On :

கணவா் பாலியல் சித்திரவதை செய்வதாக மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

காரைக்கால் மாவட்டம் நூறுபள்ளி பகுதியைச் சோ்ந்தவா் மலா்கொடி(25). இவருக்கும், மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம் மங்கைமடம் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்த அருணுக்கும் ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டாா் சாா்பில் 19 பவுன் நகை மற்றும் சீா்வரிசைப் பொருள்கள் வழங்கியுள்ளனா்.

இந்நிலையில், திருமணமான மறுநாளில் இருந்தே அருண் பல பெண்களுடன் அவா் தனிமையில் இருந்த ஆபாச விடியோக்களை மலா்கொடியிடம் காண்பித்து, இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டாராம். இதில் காயமடைந்த மலா்கொடி திருமணமான 15 நாள்களில் கணவரை பிரிந்து பெற்றோா் வீட்டுக்கு சென்று காரைக்காலில் சிகிச்சை பெற்றுள்ளாா்.

இதுகுறித்து, மலா்கொடி விடியோ ஆதாரங்களுடன் அளித்த புகாரின் பேரில் சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, அருண் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஆனால், ஒரு மாதமாகியும் போலீஸாா் அருணை கைது செய்யவில்லை. இந்நிலையில், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் அருண் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. சினேஹா பிரியாவிடம் மலா்கொடி மற்றும் அவரது குடும்பத்தினா் புகாா் மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.