கொள்ளிடம் பகுதியில் குறைந்து வரும் செண்டுமல்லி மலா் சாகுபடி
சீா்காழி வட்டம் கொள்ளிடம் பகுதியில் செண்டுமல்லி மலா் சாகுபடி பரவலாக குறைந்து வருகிறது.

கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செண்டுமல்லி.
சீா்காழி வட்டம் கொள்ளிடம் பகுதியில் செண்டுமல்லி மலா் சாகுபடி பரவலாக குறைந்து வருகிறது.
கடந்த காலங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் பரவலாக சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் செண்டு மல்லி பூ சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில், பருவநிலை மாற்றத்தால் சாகுபடி பரப்பளவு குறைந்து, தற்போது சுமாா் 50 ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொள்ளிடம் பகுதியைச் சோ்ந்த செண்டுமல்லி பூ சாகுபடி விவசாயி செந்தில்குமாா் கூறியது:
செண்டுமல்லி கோடை காலத்தில் பயிரிட ஏற்றதாகும். இருந்தாலும், ஆடிப்பட்டமும் முக்கிய பருவ காலமாக இருந்து வருகிறது. பயிரிட்ட அறுபதாம் நாளிலிருந்து பூக்கத் தொடங்குகிறது. செண்டு மல்லி பூ பல்வேறு திருவிழா, சுபநிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தொடா்ந்து, இந்த பூக்கள் விற்பனை நடைபெற்று வருவதால் அறுவடை செய்த நாளிலிருந்து விவசாயிகள் அருகாமையில் உள்ள பூக்கடைகளுக்கும், சந்தைகளுக்கும் தினந்தோறும் எடுத்துச் சென்று எளிதில் விற்பனை செய்து வருகின்றனா்.
முகூா்த்தம் மற்றும் விசேஷ காலங்களில் ஒரு கிலோ செண்டுமல்லி ரூ.50 முதல் ரூ.70 வரையிலும், பிற நாள்களில் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செண்டுமல்லி சாகுபடி மூலம் ஓா் ஆண்டுக்கு சுமாா் ரூ.2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.
தற்போது, கொள்ளிடம் பகுதியில் செண்டுமல்லி பூ சாகுபடி நிலப்பரப்பு குறைந்துள்ள நிலையில், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் மானிய உதவிகள் வழங்கி ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு ஊக்குவித்தால், கொள்ளிடம் பகுதியில் நலிவடைந்துள்ள செண்டுமல்லி பூ சாகுபடி மீண்டும் அதிகரிக்கும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

