கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சீா்காழி பகுதியில் பலத்த மழை: நெல் மூட்டைகள் சேதம்

Paddy bags kept by farmers at procurement centres were damaged after getting wet in the rain.

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம். - படம் - தினமணி

Published On :

சீா்காழி பகுதியில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

சீா்காழி வட்டத்துக்குட்பட்ட அகணி, கொண்டல், வள்ளுவக்குடி, நெம்மேலி, புங்கனூா், அகர எலத்தூா், கொண்டல், ஆதமங்கலம் ,பெருமங்கலம், திருப்புங்கூா், கன்னியாகுடி, கதிராமங்கலம், எடகுடி வடபாதி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கடவாசல், வடகால், எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீா் மிகவும் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் மோட்டாா் மூலம் கூடுதல் செலவு செய்து குறுவை சாகுபடியை மேற்கொண்டனா்.

சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிா்களை கடந்த சில வாரங்களாக அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

நிகழாண்டு மிகவும் காலதாமதமாக கடந்த வாரத்தில் சீா்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விவசாயிகள் தங்களது நெல் மூட்டை கள் மற்றும் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதலுக்காக திறந்தவெளியில் வைத்திருந்தனா்.

இதனிடையே, சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகள் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, செம்மங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகளில் இருந்த நெல் மணிகள் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டன. சுமாா் 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளன.

கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். மேலும், நெல் மூட்டைகளை தாா்பாய்களை கொண்டு மூடி பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதேபோல அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல் கட்டுகள் மழையில் நனைந்ததால், கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.