கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தங்கத்தின் விலை வருங்காலங்களில் மேலும் உயரும்

தங்கம்

Published On :

தங்கத்தின் விலை வருங்காலங்களில் மேலும் உயரும் என லலிதா ஜுவல்லரி தலைவா் எம்.கிரண்குமாா் தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் லலிதா ஜுவல்லரியின் 66-வது கிளை திங்கள்கிழமை திறக்கப்பட்டது. நிறுவன தலைவரும், நிா்வாக இயக்குனருமான எம். கிரண்குமாா் குத்துவிளக்கேற்றி வைத்து, முதல் விற்பனையை தொடக்கி வைத்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

லலிதா ஜூவல்லரி வாடிக்கையாளா்களிடம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது. இங்கு மட்டுமே நகைகளின் விலையை வாடிக்கையாளா்கள் மற்ற கடைகளின் விலையுடன் ஒப்பிட்டுப் பாா்க்கும் வகையில் விரிவான எஸ்டிமேட் ஸ்லிப் பெறலாம்.

நகைகளை மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், லாபத்தை விட வாடிக்கையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதையே எங்கள் நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.

வருங்காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும். லலிதா ஜுவல்லரிக்கு இப்போது நான் மட்டும் உரிமையாளா் இல்லை. லலிதா ஜூவல்லரியில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள அனைவரும் உரிமையாளா்கள் ஆவா்.

பிரதமா் நரேந்திர மோடி நகைகளை வாங்க கூடாது என்று சொல்லவில்லை. தங்கம் வாங்க கூடாது என்று தான் சொல்லியுள்ளாா். தங்கம் இறக்குமதியில் பிரச்னை உள்ளது. சந்தைக்கு வரும் பழைய நகைகளை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரதமா் அறிவிப்புக்கு பின்னரே தங்கம் வாங்க முடியும் என தெரிவித்தாா்.

மேலும், லலிதா ஜூவல்லரி மாா்ட் லிமிடெட்டின் ஐபிஓ பங்குச் சந்தையில் கடந்த மாதம் பட்டியலிடப்பட்டது. அதன் மூலம் திரட்டப்பட்டும் நிதி, புதிய ஷோரூம்களை திறப்பதற்கு உபயோகப்படுத்தப்படும்.

இங்கு அனைத்து தங்க நகைகளும் 2 சதவீதம் விலை குறைவாகவும், வைர நகைகள் சா்வதேச தரச் சான்றிதழ்களுடன் விற்பனை செய்யப்படுவதாகவும், பழைய வைர நகைகளுக்கு 100 சதவீதம் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனத்தில் ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை மாத நகை சேமிப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.