ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

"தமிழகத்துக்கான காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும்

காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைத்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :

காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைத்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்துக்கு திங்கள்கிழமை வந்த அச்சங்கத்தின் பிரசார பேரியக்கத்தினர் வலியுறுத்திய கோரிக்கைகள்:

காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்றுக் குழுவை உடன் அமைக்க வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடகம் கட்டவுள்ள அணைகளை கைவிட செய்ய வேண்டும். காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடை செய்ய வேண்டும். தமிழக வறட்சி நிலையை நிரந்தரமாக போக்க தென்னக நதிகளை இணைக்க வேண்டும். பாசன வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வாரி நீர் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும். தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி வேளாண் விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதம் சேர்த்து விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நாகை புதிய பேருந்துநிலையத்தில் நடைபெற்ற பிரசார பயண கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலர் பி.எஸ். மாசிலாமணி, மாவட்டச் செயலர் எஸ். சம்பந்தம் தலைமை வகித்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன், சிபிஐ ஒன்றியச் செயலர் கோ. பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.