மின் ஆளுமை சான்றிதழ்கள் வழங்குவதற்கு ஆகும் செலவினத் தொகையை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் புதன்கிழமை விடுப்புப் பெற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மின் ஆளுமை சான்றிதழ்கள் வழங்குவதற்கு ஆகும் செலவினத் தொகையை அரசு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பில் பணியமர்த்தப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்தியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்தத்தின் மயிலாடுதுறை வட்டத் தலைவர் திருமலைசங்கு தலைமையில், மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில் உள்ள சங்கக் கட்டடத்தில் ஒன்றிணைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் விடுப்புப் பெற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த காத்திருப்புப் போராட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது.
சங்கத்தின் வட்டச் செயலாளர் குமரவேலு, பொருளாளர் குமரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.