எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி: தவறி விழுந்த தொழிலாளி சாவு

வேதாரண்யம் அருகே நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:11 am

DIN

வேதாரண்யம் அருகே நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
வேதாரண்யத்தை அடுகேயுள்ள வாய்மேடு மேற்கு பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 40 அடி உயரமுள்ள இந்த தொட்டியின் கட்டுமானத்துக்கு தாங்கல் கொடுக்கப்பட்ட  மரங்களை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கீழ்வேளூர் அருகே பெருஞ்சாத்தங்குடியைச் சேர்ந்த பாப்பையன் மகன் செல்லப்பா(35)தவறி விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பலனின்றி செல்லப்பா புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.