கோழிக் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
கீழ்வேளூர் அருகே ஆற்றில் கோழிக் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.


கீழ்வேளூர் அருகே ஆற்றில் கோழிக் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
கீழ்வேளூர் அருகே தேவூரில் உள்ள கடுவையாற்றில் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, துர்நாற்றம் உண்டாவதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
போராட்டத்தை அடுத்து அங்கிருந்த வணிகர்கள் உடனடியாக கோழிக் கழிவுகளை சுத்தம் செய்வதாகக் கூறியதை அடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...