சீர்காழி வட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் 2018-ஆம் ஆண்டுக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சீர்காழி கருவூல உதவி அலுவலர் மணிவண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் 2018-ஆம் ஆண்டுக்கான நேர்காணலுக்கு ஏப்ரல் முதல் வேலை நாளில் இருந்து, ஜூன் மாதம் வரை வரலாம். நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதியர்கள் தங்களது வீட்டு முகவரி, ஆதார் எண், செல்லிடப்பேசி எண், நிரந்தர கணக்கு அட்டை எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஓய்வு பெற்றபோது தாம் வகித்த பதவியின் ஆதாரம் ஆகியவற்றை சீர்காழி, தென்பாதி, எண். 45, வி.என்.எஸ். நகரில் செயல்பட்டு வரும் சார்நிலைக் கருவூல அலுவலகத்துக்கு கொண்டு
வரவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








