காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நாகை எல்.ஐ.சி. அலுவகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கெளதமன், கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உ. மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நாகை மாலி, மாநிலக் குழு உறுப்பினர்கள் வி. மாரிமுத்து, ஏ.வி. முருகையன், மதிமுக ஒன்றியச் செயலாளர் ஜி. அய்யாப்பிள்ளை, தமுமுக மாவட்டச் செயலாளர் ஜபருல்லா, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி இப்ராஹிம் மற்றும் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூதாட்டி கண் தானம்
ஆம்னி பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் ஓய்வு பெற்ற நீதிபதி நேரில் ஆய்வு

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி மனைவி மனு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


