புதுவாழ்வுத்திட்டப் பணியாளர்களுக்கு நிபந்தனையின்றி பணி வாய்ப்பு வழங்கக் கோரி, புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, 12 ஆண்டுகள் உழைத்த புதுவாழ்வுத் திட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்க வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர். செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் தங்கமணி, ஆலோசகர்கள் பால. மனுநீதிச்சோழன், நமச்சிவாயம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








