சீர்காழி வட்டத்தில் வேலையின்றி தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றியத்திலுள்ள 79 ஊராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் விவசாயத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். சம்பா நெற்பயிர் சாகுபடி சில கிராமங்களில் மட்டுமே நடைபெற்றது. இதனால், குறிப்பிட்ட சில கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது. அறுவடை முழுவதும் முடிந்துவிட்டது. இயந்திர அறுவடையால், தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது.
100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ஊராட்சிகள் தோறும் நாள்தோறும் ஆண், பெண் வேலையாள்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை கடந்த ஆறு மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்து முற்றிலும் வறட்சி நிலை ஏற்பட்டு 60 சதவீத நிலங்கள் பயிரிட முடியாமல் தரிசாகக் கிடக்கின்றன. இதனால், வேலையில்லாமல் தவிக்கும் ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்கள் உணவுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கொள்ளிடம் வட்டார விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிவப்பிரகாசம்பிள்ளை கூறியது: சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தற்போது வேலையின்றி வறுமையில் வாடிவருகின்றனர். எனவே, ஏழைத் தொழிலாளர்களின் வறுமையைப் போக்கும் வகையில் அவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் நிவாரண உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.37 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: காலக்கெடு நிா்ணயிக்க ஆசிரியா்கள் வலியுறுத்தல்

நாட்டில் டிராக்டா் விற்பனை விறுவிறுப்பு

கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு வேதாந்தா ரூ.62,722 கோடி பங்களிப்பு!





