மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

காவிரி விவகாரம்: வேதாரண்யத்தில் மனிதச் சங்கிலி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், மீத்தேன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 3:24 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், மீத்தேன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் தொடங்கி வடக்கு வீதி, மேலவீதி வரை நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் என்.வி. காமராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் உரிய அழுத்தம் தராத மாநில அரசைக் கண்டித்தும், வேதாரண்யம் பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்  முழக்கமிட்டனர். மாலை 5.15-க்கு தொடங்கிய போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.