வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நாகை மாவட்டம், பொறையாறு ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:21 am

நாகை மாவட்டம், பொறையாறு ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டு பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சீதளாதேவி மாரியம்மன் தேரில் எழுந்தளினார். காலை 6.30 மணியளவில் தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
இதையொட்டி, நான்கு வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். தேர் பிற்பகலில் நிலையை வந்தடைந்தது. மேலும் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி போன்ற பல்வேறு காவடிகள் எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். திங்கள்கிழமை கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை புஷ்கரணியில் தீர்த்தம் வழங்கும் விழாவும், இரவு 8 மணியளவில் தெப்பத் திருவிழாவும், சந்தனக் காப்பு அலங்கார நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தி. சிவகுமார் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.