முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கடையூரை அடுத்த காழியப்பநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள்

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

திருக்கடையூரை அடுத்த காழியப்பநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காழியப்பநல்லூரில் டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என புகார் தெரிவித்து வரும் மாணவர்கள், இக்கோரிக்கையை வலியுறுத்தி, வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், நூலகத்தை முறையாகப் பாரமரிப்பதில்லை எனவும் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். 
தகவலறிந்த பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம், போலீஸாருடன் நிகழ்விடத்துக்குச் சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்பதாக நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.