செம்பனார்கோயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு புதன்கிழமை நிவாரணம் வழங்கினார் எம்எல்ஏ. பவுன்ராஜ் வழங்கினார்.
செம்பனார்கோயில் அருகேயுள்ள தலைச்சங்காட்டைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், ராமசந்திரன்.
இவர்களது குடிசை வீடுகள் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் எரிந்து சேதமடைந்தது.
இதையறிந்த, பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் நேரில் சென்று பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசு உதவித்தொகை ரூ. 5,000 மற்றும் அரிசி, வேட்டி, புடவைகளை வழங்கினார்.