ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

கொள்ளிடத்தில் தமிழக முதல்வருக்கு வரவேற்பு

நாகை மாவட்டத்துக்கு புதன்கிழமை வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமிக்கு சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் பாலம்

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

நாகை மாவட்டத்துக்கு புதன்கிழமை வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமிக்கு சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் பாலம் அருகே மாவட்ட நிர்வாகம், அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க நாகை மாவட்டம், திருக்கடையூருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வருகை தந்தார். சென்னையிலிருந்து, கடலூர், சிதம்பரம் வழியாக வந்த முதல்வருக்கு நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் அதிமுக நாகை மாவட்டச் செயலாளரும்,  தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றனர்.
 பின்னர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதி மோகன், சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி ஆகியோர் தமிழக முதல்வருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து, பட்டாச்சாரியார்கள் ஸ்ரீனிவாசன், பாலாஜி ஆகியோர் முதல்வருக்கு வெண்பட்டு சால்வை அணிவித்து,  பூரண கும்பமரியாதை அளித்து, நாங்கூர் பகுதியில் உள்ள 11பெருமாள் கோயில்களின் பிரசாதங்களை வழங்கினர்.  மேலும், அதிமுக மகளிரணியினர் சாலையின் இருபுறமும் நின்று, முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். அப்போது, லேசாக பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், பாதுகாப்பு வளையத்தை தாண்டி, சாலையில் இறங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பொதுமக்களின் வரவேற்பை ஏற்றபடி சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது, அங்கு நின்ற பள்ளி மாணவியரிடம் கைகுலுக்கியவாறு சிறிது நேரம் உரையாடினார். பின்னர் காரில் திருக்கடையூருக்குப் புறப்பட்டு சென்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் அமைச்சர் ஜெயபால், மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன்,  முன்னாள் எம்எல்ஏ சக்தி, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் நற்குணன், ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட திரளான அதிமுகவினர்கள் பங்கேற்றனர். முன்னதாக, முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜு நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயகுமார் (நாகை), செந்தில்குமார் (தஞ்சை) ஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.