வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக ஸ்ரீராமகிருஷ்ணா சேவாஸ்ரம் சார்பில் ரூ. 85 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் சுமார் 2,500 குடும்பத்தினர் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், பாவகடாவில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவாஸ்ரம் மற்றும் இன்போஸிஸ் நிறுவனம் சார்பில் தார்ப்பாய், சூரிய சக்தி விளக்கு, போர்வைகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட ரூ.3,500 மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டன. வேட்டைக்காரனிருப்பு அரசுப் பள்ளி வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். பாவகடா விவேகனந்தா ஆஸ்ரமம் சுவாமிஜி ஐப்பானந்தா சுவாமிகள், திருவேற்காடு டி.ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகூர் அரிமா சங்கத் தலைவர் ஆர். ராஜேந்திரன் மற்றும் சென்னை அரும்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர் அரிமா சங்க நிர்வாகிகள், காவல் துறை நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் மீதான திமுக அதிருப்தி விரைவில் சரிசெய்யப்படும்: காங்கிரஸ் எம்.பி.

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் தில்லியில் ஆலோசனை!

இந்தியாவின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


