இடிந்து விழும் நிலையில் தொடக்கப்பள்ளி சத்துணவுக் கூடம்

சீர்காழி அருகேயுள்ள துளசேந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் உள்ள சத்துணவுக் கூடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதை
Updated on
1 min read

சீர்காழி அருகேயுள்ள துளசேந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் உள்ள சத்துணவுக் கூடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
 நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த  கொள்ளிடம் துளசேந்திரபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 110-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கான சத்துணவுக் கூடம் பள்ளிக் கட்டடத்தை ஒட்டி அமைந்துள்ளது. 
இந்த சத்துணவுக் கூடக் கட்டடம் கடந்த 2004 -ஆம் ஆண்டு 11 -ஆவது மானிய நிதிக்குழுவின் மூலம் கட்டப்பட்டது. மிகவும் குறுகலான இக்கட்டடம், தற்போது இடிந்துவிழும் நிலையில் உள்ளது. 
சுவர்களின் நான்கு புறங்களிலும் விரிசல் ஏற்பட்டு, கட்டடத்தின் உள்புற கூரையின் காரை பெயர்ந்து விழுந்துவிட்டது. இந்த கட்டடத்தில்தான் தினந்தோறும், சமையல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள துளசேந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவுக் கூடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com