விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டம்

செம்பனார்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

செம்பனார்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் செ. கலைவண்ணன் தலைமை வகித்தார்.  மாவட்டப் பொறுப்பாளர் கே. கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில், ஏப். 14-ஆம் தேதி, டாக்டர். அம்பேத்கர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது. ஒன்றியம் முழுவதும் கட்சிக் கொடியேற்றுவது.  பொதுக் கூட்டங்கள் நடத்தி,  நலிவடைந்த மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவது. மேலப்பாதி டாஸ்மாக் கடையை அகற்றப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மணிவளவன், ராஜேந்திரன், ராமலிங்கம், ஈழவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பரசலூர் குமரேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com