சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீரசோழனாற்றின் குறுக்கே படுக்கை அணை கட்டுமானப் பணி தொடக்கம்

நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள மங்கைநல்லூரில் படுக்கை அணை மற்றும் மதகு மறு கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:51 am

DIN

நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள மங்கைநல்லூரில் படுக்கை அணை மற்றும் மதகு மறு கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது.
நீர் மற்றும் நிலவளத் திட்டத்தின் கீழ் ரூ. 9 கோடி மதிப்பில் வீரசோழனாற்றின் குறுக்கே படுக்கை அணை மற்றும் 3 கி.மீட்டர் தொலைவு தலைப்பு மதகு மறுகட்டுமானப் பணியை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  இந்த அணையின் மூலம் 283 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 
பணி தொடக்க நிகழ்ச்சியில் குத்தாலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் என். தமிழரசன், அவைத் தலைவர் அரிராமன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சண்முகம், இளங்கோவன், ரமேஷ், உதவி செயற்பொறியாளர் வி. சண்முகம், உதவி பொறியாளர் ஆர். சுப்பிரமணியன், பாசன ஆய்வாளர் வி.வேதபுரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.