/

குடிமராமத்துப் பணிகளை விவசாயிகளுடன் சென்று ஆய்வு செய்யவேண்டும்: பி.ஆர். பாண்டியன்

சீர்காழியில் நடைபெற்ற மாநில அளவிலான நெல் திருவிழாவில் பங்கேற்ற பி.ஆர். பாண்டியன், செய்தியாளர் களிடம் கூறியது:

Updated On :23 ஜூலை 2018, 5:43 am IST

சீர்காழியில் நடைபெற்ற மாநில அளவிலான நெல் திருவிழாவில் பங்கேற்ற பி.ஆர். பாண்டியன், செய்தியாளர் களிடம் கூறியது:
மேட்டூர் அணை திறக்கப்பட்டதையடுத்து, கல்லணையிலிருந்து பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர், 3 தினங்களுக்குள்ளாக கடைமடை பகுதிக்கு வந்தாக வேண்டும். ஆனால் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் ஜூலை 10- ஆம் தேதி அளவில்தான் தொடங்கப்பட்டுள்ளன.
 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் காவிரி டெல்டா பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதாக கூறுகின்றனர். ஆனால், அதிகாரிகளின் ஆய்வுத் திட்டம் குறித்து விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட  இடங்களை மட்டும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.  இதனால், இப்பணிகள் முழுமையாக நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 
எனவே, குடிமராமத்துப் பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ய செல்லும்போது, அது குறித்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் அல்லது விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தி, அவர்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.  பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தொடங்கப்படாத மராமத்துப் பணிகள் குறித்த விவரங்களை தெரிவிப்பதோடு, அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பிப்ரவரி மாதத்தில் தொடங்க வேண்டும். அப்போதுதான்,  ஊழல், முறைகேடு இல்லாமல் பணிகள் நடைபெறும்.
பாரம்பரிய விவசாய முறைப்படி உற்பத்தி செய்யக்கூடிய இயற்கை உணவுப்பொருள்களை, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவாக பயன்படுத்த சட்டம் இயற்ற வேண்டும். சத்துணவு மையங்களில்,  பாரம்பரிய இயற்கை உணவு உற்பத்திப் பொருள்களை பயன்படுத்துவதை கட்டாயமாக்கினால், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.