புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலிருந்து சுற்றுலா வேன்களில் மது புட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்ற திருப்பூரைச் சேர்ந்த 3 பேரை நாகூர் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
நாகூர் காவல் ஆய்வாளர் குலோத்துங்கன், சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீஸார், சனிக்கிழமை வாஞ்சூர் சோதனைச் சாவடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரைக்காலிலிருந்து வந்த 3 சுற்றுலா வேன்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
இந்தச் சோதனையின் போது, அந்த வேன்களில் சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மதுபுட்டிகள் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, 3 சுற்றுலா வேன்களையும், மதுபுட்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸார், வேன் ஓட்டுநர்களான திருப்பூர், பெரியார் காலனியைச் சேர்ந்த பி. சுபேர்சேட் (31), அவினாசி சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஜெ. இமானுவேல் (38), கூனம்பாடி ஈஸ்வரன்கோயில் தெருவைச் சேர்ந்த க. ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!





